புதுடெல்லி: இந்திய விண்வௌி வீரர் சுபன் ஷூ சுக்லா அடுத்த மாதம் சர்வதேச விண்வௌி மையத்துக்கு செல்ல உள்ளார். ஆக்சியம் ஸ்பேஸ் நாசாவுடன் இணைந்து ஏப்ரல் – ஜூன் இடையே ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் என்ற விண்கலத்தை சர்வதேச விண்வௌி மையத்துக்கு ஏவ உள்ளது. இந்த ஆக்ஸ்-4 விண்வௌி பயணத்தில் இந்தியாவை சேர்ந்த சுபன் ஷூ சுக்லா பயணிக்க உள்ளார்.
மேலும் அவருடன் போலந்து மற்றும் ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பயணிக்க உள்ளனர். இவர்கள் 14 நாள்கள் விண்வௌியில் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த சுபன் ஷூ சுக்லா இந்திய விமான படையில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவின் சுபன் ஷூ சுக்லா மே 29ம் தேதி விண்வௌி பயணம் appeared first on Dinakaran.