
இந்திய வெளியுறவுத்துறை சார்பில் விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியாவின் 15 இடங்களை தாக்க பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்தது. லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்தது. பாகிஸ்தான் ராணுவத்தை குறி வைத்து தாக்கவில்லை. இந்தியாவின் ராணுவ தளங்களை பாக். குறிவைத்தது என்றனர்.