இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் நல்லபடியா முடியணும் - நடிகை சிம்ரன்

3 hours ago 2

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. என்னுடைய 30 வருட திரைத்துறை வாழ்க்கையில் டூரிஸ்ட் பேமிலி சிறந்த படம். பெண் கதாநாயகி படங்களில் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தால் பண்ணலாம். அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லாம் சரியாக போய் கொண்டுதான் இருக்கிறது. போர் பதற்றம் நல்லபடியா முடிய வேண்டும் என்று கடவுளை வேண்டிக்குறேன்; ஆனால் மனித நேயம்தான் ஜெயிக்க வேண்டும்.

80-ம் ஆண்டுகளில் இருந்த கதாநாயகிகள் மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லதுதானே. பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்ள். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, "விஜய் அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரம் வரும்போது நானே சொல்கிறேன்" என்று கூறினார்.

Read Entire Article