இந்தியா-பாகிஸ்தான் பிரியாமல் இருந்தால் பாஜவினர் உருது மொழியில் பேசி இருப்பார்கள்: கர்நாடக அமைச்சர் சந்தோஷ்லாட் பேச்சு

1 week ago 5

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த ‘‘ஜெய் பாபு, ஜெய் பீம் ஜெய் சம்விதான்’’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அம்மாநில அமைச்சர் சந்தோஷ் லாட் பேசும்போது, இந்தியாவை உடைத்ததற்கு நேருதான் காரணம் என்று பாஜ தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் ஜவஹர்லால் நேருவால் உங்களுக்கு (பாஜ) பலன் கிடைக்கவில்லையா? மனசாட்சி இருந்தால், உங்கள் கட்சி அலுவலகத்தில் நேருவின் புகைப்படத்தை வையுங்கள்.

தற்போது பாகிஸ்தானில் 25 முதல் 26 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் அனைவரும் இங்கே இருப்பார்கள். அப்போது அவரது (பாஜ) தலைவர்கள் பேச்சு எப்படி இருக்கும்? உருது மொழியில் பேசி இருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு வகுப்பினர் மீது வன்மத்தை காட்டுவது என்ன நியாயம் ? என்றார்.

The post இந்தியா-பாகிஸ்தான் பிரியாமல் இருந்தால் பாஜவினர் உருது மொழியில் பேசி இருப்பார்கள்: கர்நாடக அமைச்சர் சந்தோஷ்லாட் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article