இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் எதிரொலி : சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு, போலீஸார் தீவிர கண்காணிப்பு!!

7 hours ago 1

சென்னை : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பை விட கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்திற்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், மாநில போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் பலத்த சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக அண்ணாசாலை, காமராஜர் சாலை, வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், முக்கிய கோயில்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் எதிரொலி : சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு, போலீஸார் தீவிர கண்காணிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article