மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டி முடிவடைந்ததையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. தோல்வியடைந்த இந்தியா சில புள்ளிகளை இழந்த நிலையில் 3-வது இடத்தில் தொடருகிறது. மற்ற அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பின்வருமாறு:-
1. தென் ஆப்பிரிக்கா - 66. 67 சதவீதம்
2. ஆஸ்திரேலியா - 61.46 சதவீதம்
3. இந்தியா - 52.78 சதவீதம்
4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்
5. இலங்கை - 45.45 சதவீதம்
6. இங்கிலாந்து - 43.18 சதவீதம்
7. வங்காளதேசம் - 31.25 சதவீதம்
8. பாகிஸ்தான் - 30.30 சதவீதம்
9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்