இந்தியா' கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: அமித்ஷா

4 months ago 14

மும்பை,

மராட்டியத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மாநாடு ஷீரடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சரத்பவார் துரோக மற்றும் நம்பிக்கை துரோக அரசியலை மராட்டியத்தில் 1978-ம் ஆண்டு தொடங்கினார். 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அந்த அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாஜக இந்த வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக 550 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கூரையில் இருந்து கோவிலுக்கு செல்வதை உறுதி செய்தது. 370 -வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டது. மராட்டியத்தின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை. மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதை நிறைவேற்றும். டெல்லி, மராட்டியம், மேற்கு வங்கத்தில் 'இந்தியா' கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article