புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, “அரியானா, கோவா, குஜராத், டெல்லி ஆகிய இடங்களில் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது பற்றி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும் ஒருமித்த கருத்துடன் அனைவரையும் முன்னோக்கி அழைத்து செல்ல, பிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
சில நேரங்களில் சிக்கல்கள் வருவது உண்மைதான். பாஜவை தோற்கடிக்க பேரவை தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி குழப்பத்துக்கு தீர்வு காண வேண்டும்” என இவ்வாறு வலியுறுத்தினார்.
The post இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.