இந்தியா ஒரு ஜனநாயக சமூகம் என்பதால் 80 கோடி மக்களுக்கு உணவளிக்க முடிகிறது: ஜெய்சங்கர் பெருமிதம்

1 week ago 3

முனீச்: ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த குழு விவாதத்தில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதில் அமெரிக்க செனட்டர் எலிசா ஸ்லாட்கின் கூறுகையில், ‘ஜனநாயகம் உங்கள் மேசையில் உணவை வைப்பதில்லை’ என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது, செனட்டர் அவர்களே ஜனநாயகம் உங்கள் மேஜையில் உணவை வைப்பதில்லை என்று நீங்கள் கூறினீர்கள். உண்மையில் உலகில் எங்கள் பகுதியில் ஜனநாயகம் அதனை செய்கின்றது. இன்று நாம் ஒரு ஜனநாயக சமூகமாக இருப்பதால் ஊட்டச்சத்து ஆதரவையும், 80கோடி மக்களுக்கு உணவையும் வழங்குகிறோம். எனவே நேர்மையான உரையாடல்களை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

The post இந்தியா ஒரு ஜனநாயக சமூகம் என்பதால் 80 கோடி மக்களுக்கு உணவளிக்க முடிகிறது: ஜெய்சங்கர் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article