இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; புதிய பெயரில் பரிசுக்கோப்பை..?

1 day ago 2

லண்டன்,

2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read Entire Article