சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே வரும் 25ம் தேதி சென்னையில் நடக்கும் 2வது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடக்கிறது. இம்மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 2வது டி20 போட்டி, ஜன.25ம் தேதி இரவு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ளது.
அந்த போட்டியை காண ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனை ஜன.12ம் தேதி (இன்று) முற்பகல் 11மணிக்கு தொடங்குகிறது. அதன்படி குறைந்தபட்ச அனுமதி சீட்டின் விலை ரூ.1500. தவிர, 2500, 5000 ரூபாயிலும் அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படும். மேலும் ஏசி மற்றும் விருந்துடன் கூடிய மாடங்களுக்கான அனுமதிச்சீட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்களை ‘District by Zomoto’ என்ற செல்போன் செயலி மூலமாகவோ அல்லது http://district.in என்ற இணையதளம் மூலமாகவோ வாங்கலாம். ரசிகர்களுக்கான விதிமுறைகள் அனுமதிச்சீட்டுகளில் ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டு இருக்கும். இந்த தகவல்கள் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
The post இந்தியா-இங்கிலாந்து டி20 சென்னை போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை appeared first on Dinakaran.