சென்னை: இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடைபெற உள்ளது. இப்போட்டியை பார்க்க வரும் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.