இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு தொண்டு செய்த பாரதி வாழியவே! முதல்வர் பதிவு

1 month ago 3

சென்னை: இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு தொண்டு செய்த பாரதி வாழியவே என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்! மொழி – நாடு – பெண் விடுதலை – பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழியவே!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு தொண்டு செய்த பாரதி வாழியவே! முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article