லாகூர்: இந்திய விமானங்கள் செல்வதற்கான பாக். வான்வெளி மூடப்பட்டு இருப்பது வருகிற ஜூன் 24 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்திய விமானங்கள் கடந்து செல்ல தடை விதித்து பாக். வான் வெளியை மூடுவதாக பாக். அரசு அறிவித்தது.
தற்போது இருநாடுகள் இடையே போர் பதற்றம் முடிவுக்கு வந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை இந்தியா, மீண்டும் மறுபரிசீலனை செய்யவில்லை. அதே போல் பாக்.வான்வெளி மூடப்பட்டு இருப்பதையும் அந்த நாட்டு அரசு நீட்டித்து உள்ளது. இதுதொடர்பாக பாக். விமான நிலைய ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு அடிப்படையில், ‘பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜூன் 24 அதிகாலை 4:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது இந்தியரால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களும், இந்திய இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும். இந்திய விமான நிறுவனங்கள் அல்லது ஆபரேட்டர்களால் இயக்கப்படும் எந்த விமானமும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய விமானங்களுக்கு தடை பாக். வான்வெளி மூடல் ஜூன் 24 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.