இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு அமெரிக்க விருது அறிவிப்பு..!!

3 hours ago 1

வாஷிங்டன்: இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு அமெரிக்க விருது அறிவித்துள்ளது. 2025-க்கான சிறந்த சேவைக்கான விருதை அமெரிக்க வானியல் ஆய்வு சங்க அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு ஆணையம் அறிவித்துள்ளது. இவர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த முறையில் புயல் முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதற்காக ஏஎம்எஸ்-இன் வெப்பமண்டல வானிலை மற்றும் வெப்பமண்டல சூறாவளி ஆய்வுக் குழு இந்த கெளரவத்தை மொஹபத்ராவுக்கு அளித்துள்ளது.

இயற்பியலில் ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி) முடித்துள்ள மொஹபத்ரா, உலக வானிலை அமைப்புக்கான (டபிளியூஎம்ஓ) இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும், ஐ.நா. வானிலை முகமையின் 3வது துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறாா். சிறந்த முறையில் புயல் முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதற்காக விருது வழங்கப்படுகிறது.

The post இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ராவுக்கு அமெரிக்க விருது அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article