பணி: Short Service Commission Officers (SSC-Tech 65- Men & SSC-Tech 36-Women)
மொத்த காலியிடங்கள்: 379 (பாட வாரியாக காலியிடங்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) மொத்த காலியிடங்களில் போரில் வீரமரணமடைந்த விதவை மனைவிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது வரம்பு: 5.2. 2025 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேசன்/ ஐடி/ ஆர்க்கிடெக்சர்/ஏரோநாட்டிக்கல்/அவியோனிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பம்/சாட்டிலைட் கம்யூனிகேசன்/ரிமோட் சென்சிங்/பாலிஸ்டிக்ஸ் இன்ஜினியரிங்/அணுவியல் தொழில்நுட்பம்/ லேசர் டெக்னாலஜி/ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் அல்லது மேற்குறிப்பிட்ட பாடங்களை ஒரு பாடமாகக் கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்து பட்டம் பெற இருக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பி.இ.,/பி.டெக்., பட்டம் எந்தெந்த பாடங்களில் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் அல்லாத (Non-Technical) பிரிவுக்கு கலை/அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடங்களின் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்கில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2ம் கட்டமாக சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். அக்டோபர் 2025ல் பயிற்சி தொடங்கும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் PG Diploma in Defence Management and Strategic Studies எனும் வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். இந்த படிப்பானது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான Pre Commissioning Training Academy ல் வழங்கப்படும். படிப்புக்கான முழுச் செலவையும் இந்திய ராணுவம் ஏற்றுக் கொள்ளும். பயிற்சி முடிந்தவுடன் இந்திய ராணுவத்தில் ‘லெப்டினென்ட்’ அதிகாரியாக பணியமர்த்தப்படுவர்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.02.2025.
The post இந்திய ராணுவத்தில் 379 இடங்கள் appeared first on Dinakaran.