இந்திய ராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக‘ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் மாற்றம்

2 months ago 8

சென்னை: நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ‘‘ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தை ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்வதை அறிவிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நீல வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.

இந்திய ராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான உயர்தரக் குழுவின் 26வது கூட்டத்தில் ராணுவ அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அதன் பரிசீலனைகள் மற்றும் பரிந்துரைகளுக்காகவும், குறிப்பாக இந்திய ராணுவத்தின் தென் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post இந்திய ராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக‘ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article