இந்திய ரயில்வேயில் 8113 இடங்கள்

1 month ago 9

பணியிடங்கள் விவரம்:

1. Chief Commercial Cum Ticket Supervisor/Station Master/ Goods Train Manager: 5874 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Accounts Assistant cum Typist/Senior Clerk cum Typist: 2239 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், டைப்பிங் திறன், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.

எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை மற்றும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

கட்டணம்: எஸ்சி/எஸ்டி/ சிறுபான்மையினர்/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250/-. பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்தலாம்.கூடுதல் விவரங்களுக்கு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024.

The post இந்திய ரயில்வேயில் 8113 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article