
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் அபித் அலி (வயது 83) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.