இந்திய ட்ரோன்கள் தாக்கியபோது பாகிஸ்தான் விமானப்படை எங்கே இருந்தது?: சமூக வலைதளங்களில் பாக். மக்கள் விமர்சனம்

3 hours ago 2

லாகூர்: இந்திய ட்ரோன்கள் தாக்கியபோது பாகிஸ்தான் விமானப்படை எங்கே இருந்தது? சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகியவற்றின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதல்களில் பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்கள் மற்றும் கமிகேஸ் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்தன. இந்த ட்ரோன்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கின. இந்தத் தாக்குதல்களில் 150 முதல் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. இருப்பினும், இந்தியாவின் ட்ரோன்களை தடுக்க பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை மற்றும் அதன் எ-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், இந்திய ட்ரோன்களை கண்டறியவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலங்களில் இந்திய ட்ரோன்கள் ஊடுருவியது, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ராணுவத்தை அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதன்விபரம் வருமாறு:

  • லாகூரில் உள்ள கடற்படை வளாகத்தை இந்திய ட்ரோன்கள் தாக்கியபோது, பாகிஸ்தான் விமானப்படை எங்கே இருந்தது?
  • பாகிஸ்தானின் ஏ-400 அமைப்பு இந்தியாவின் ட்ரோன்களை ஏன் கண்டறிய முடியவில்லை? பாகிஸ்தானின் வான்பாதுகாப்பில் இது மிகப்பெரிய தோல்வி
  • இந்திய ட்ரோன்கள் எங்கள் மாவட்டத்தை தாக்கியபோது, எங்கள் ராணுவம் தூங்கிக் கொண்டிருந்தது.
  • லாகூரில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் அமைந்துள்ள ரேடார் நிலையத்து இந்திய ஹரோப் ட்ரோன் அழித்தது. பஞ்சாப் மாகாணத்தின் ஏழு மாவட்டங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தி உள்ளன.
  • பாகிஸ்தான் விமானப்படை பில்லியன் டாலர்கள் செலவழித்து வாங்கிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏன் இந்திய ட்ரோன்களை தடுக்கவில்லை?”

The post இந்திய ட்ரோன்கள் தாக்கியபோது பாகிஸ்தான் விமானப்படை எங்கே இருந்தது?: சமூக வலைதளங்களில் பாக். மக்கள் விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article