
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கேரள மாநிலத்தின் வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை மந்திரி கே.ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் மற்றும் அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அண்ணன் முத்தரசன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாசிச எதிர்ப்பு மாநாடு தொடர்பாக எடுத்துரைத்து, அதில் நாம் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்கள். என தெரிவித்துள்ளார் .