ஜெயங்கொண்டம், அக்.9: தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி விடை கிராமத்தில் மீட்டெடுத்த இடத்திற்கு பட்டா வழங்க கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளைய பெருமாள் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிடை கிராமத்தில் வசித்து வந்த இருளர் இனமக்களின் பூர்வீக வசிப்பிடத்தை மீட்டு, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார் நகர செயலாளர் பன்னீர்செல்வம் அன்பழகன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட சிறப்பு தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.