இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!

2 weeks ago 6
இந்திய கடற்படையின் செயல்பாடுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவா கடல்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் சென்ற குடியரசு தலைவர், கடற்படையினருக்கான சீருடை அணிந்திருந்தார். அரபிக் கடலில் 15 போர் கப்பல்கள், 6 நீர் மூழ்கி கப்பல்கள் அணிவகுத்து போர் பயிற்சியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார். விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் இயக்கப்பட்டதையும், ஹெலிகாப்டரில் மீட்பு பணி ஒத்திகை நடைபெற்றதையும் அவர் பார்வையிட்டார். அக்னிவீரர்கள் திட்டத்தில் கடற்படையில் இணைந்துள்ள வீராங்கனைகளுடன் குடியரசு தலைவர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடலில் சிக்கிய பலரின் உயிர்கள் இந்திய கடற்படையின் துரிதமான நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.
Read Entire Article