இந்திய ஏ அணி வீரர்கள் மீது குற்றம் சாட்டிய ஆஸ்திரேலிய நடுவர்.. என்ன நடந்தது..?

2 months ago 12

மெக்கே,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் (இன்று) தொடக்கத்தில் ஆஸ்திரேலிய நடுவர் புதிய பந்தை அளித்திருந்தார். அது ஏன்? என இந்திய வீரர்கள் கேள்வி கேட்டபோது, "பந்தை நீங்கள் சுரண்டியதால் அதை மாற்றி இருக்கிறோம். இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள்." என்றார் நடுவர் ஷான் கிரேக்.

"இந்த முடிவு முட்டாள்தனமானது" என இஷான் கிஷன் சொன்னதற்கு அவர் மீது புகார் அளிக்க இருப்பதாகவும், ஷான் ஷான் கிரேக் எச்சரித்து இருந்தார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடுவர், இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பந்து மோசமான நிலையில் இருந்ததால் புதிய பந்தை தேர்வு செய்ததாகவும் விளக்கம் அளித்து இருக்கிறது.

Read Entire Article