சென்னை: இந்திய உயிர்சக்தி வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் 22 மற்றும் 23 ம்தேதிகளில் இந்திய அளவிலான உயிர்சக்தி வேளாண் மாநாடு பெங்களூருவில் நடக்கிறது. இந்திய அளவிலான உயிர்சக்தி வேளாண் மாநாட்டில் இந்தியாவின் வருங்கால உயிர்சக்தி வேளாண்மை வடிவமைத்தல் என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் இந்தியாவிலுள்ள பல ஆராய்ச்சியாளர்கள், உயிர்சக்தி வேளாண் விவசாயிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும், அவர்களின் தொலைநோக்கு நுண்ணறிவினையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து அகில இந்திய உயிர் சக்தி வேளாண் அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறுகையில், ‘‘மண்ணிற்கு ஊட்டம் கொடுத்து, பல்லுயிர் சுழலை மேம்படுத்தி, அதன் மூலம் தரமான உணவு உற்பத்தி செய்வதால் நிலையான மீளத்தன்மை கொண்ட எதிர்காலத்தை வருங்கால சந்ததியினருக்கு உருவாக்கிக் கொடுக்க இயலும். உயிர்சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர் உற்பத்தி மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஏற்படுத்துவது குறித்து மாநாட்டில் விளக்கக் காட்சி உரைகள், பயிலரங்கு பயிற்சி கருத்தரங்குகள் நடக்கிறது” என்றார்.
The post இந்திய உயிர் சக்தி வேளாண் மாநாடு: பெங்களூருவில் 2 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.