இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான பணியாகும் - வங்காளதேச பயிற்சியாளர்

3 months ago 23

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த தொடரில் தோல்வி கண்டபின் வங்காளதேச பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்திய அணி பேட்டிங்கில் வெளிப்படுத்திய இந்த அணுகுமுறையை இதற்கு முன் பார்த்தது கிடையாது.

இப்படி ஒரு அணுகுமுறையை எடுத்து விளையாட்டை முடிவுக்கு கொண்டு சென்றதற்கு முழு பெருமையும் ரோகித் சர்மாவுக்கும் அவருடைய குழுவுக்கும் சென்று சேர வேண்டும். இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான பணியாகும்.எனவே எவ்வளவு முன்னேற வேண்டி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article