
சென்னை,
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
திரைப்படங்கள் | ஓடிடி தளங்கள் |
சுமோ | டெண்ட்கொட்டா |
வல்லமை | டெண்ட்கொட்டா |
ஹார்ட் பீட் சீசன் 2 | ஜியோஹாட்ஸ்டார் |
ஹண்ட் | மனோரமாமேக்ஸ் |
அபிலாஷம் | பிரைம் வீடியோ |
அர் போர்ஸ் எலைட்: தண்டர்பேர்ட்ஸ் | நெட்பிளிக்ஸ் |
எப் 1: தி அகாடமி | நெட்பிளிக்ஸ் |
1. சுமோ
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வந்த படம் சுமோ. மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரான இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இன்று முதல் டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகிறது.
வெளியீட்டு தேதி: மே 23, 2025
எங்கே பார்க்கலாம்: டெண்ட்கொட்டா
2. வல்லமை
பிரேம்ஜி கதாநாயகனாக நடித்திருந்த படம் வல்லமை. கருப்பையா முருகன் எழுதி இயக்கிய இப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் இன்று முதல் டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகிறது
வெளியீட்டு தேதி: மே 23, 2025
எங்கே பார்க்கலாம்: டெண்ட்கொட்டா
3. ஹார்ட் பீட் சீசன் 2
நடிகர்கள்: தீபா பாலு, சாருகேஷ், அமித் பார்கவ், யோகலட்சுமி, பதின் குமார், குரு லக்சுமன்
வெளியீட்டு தேதி: மே 22, 2025
எங்கே பார்க்கலாம்: ஜியோஹாட்ஸ்டார்
4. ஹண்ட்
கடந்த ஆண்டு திரைக்கு வந்த இப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, தற்போது ஓடிடியில் வெளியாகிறது. ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ள இதில் பாவனா, ரெஞ்சி பணிக்கர் மற்றும் சந்துநாத் ஆகியோர் நடித்திருகின்றனர்.
எங்கே பார்க்கலாம்: மனோரமாமேக்ஸ்
வெளியீட்டு தேதி: மே 23, 2025
5. அபிலாஷம்
எங்கே பார்க்கலாம்: பிரைம் வீடியோ
வெளியீட்டு தேதி: மே 23, 2025
6. பியர் ஸ்ட்ரீட்: ப்ரோம் குயின்
எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
வெளியீட்டு தேதி: மே 23, 2025
7. அர் போர்ஸ் எலைட்: தண்டர்பேர்ட்ஸ்
எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
வெளியீட்டு தேதி: மே 23, 2025
8. எப் 1: தி அகாடமி
எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
வெளியீட்டு தேதி: மே 28, 2025