அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்....போலீசாருக்கு கமிஷனர் அருண் எச்சரிக்கை

7 hours ago 1

சென்னை:

சென்னை பெருநகர காவல் எல்லையில் குற்றங்கள் மற்றும் பல்வேறு உதவிகள் கேட்டு நாள் ஒன்றுக்கு சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு 500க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வருகிறது. அந்த அழைப்புகளின் படி சம்பவ இடத்திற்கு 10 நிமிடங்களில் போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அருண் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் , சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் , அவசர அழைப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண்  உத்தரவிட்டுள்ளார்.

அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும், தாமதமாக சம்பவ இடத்திற்கு சென்றாலும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, அவசர அழைப்புகளுக்கு காவல் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி மைய எண்: (1091), குழந்தைகள் உதவி மைய எண்:(1098), மூத்த குடிமக்கள் உதவி மைய எண்:(1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்: (9499957575), காவல் ஆணையாளர் குறுஞ்செய்தி புகார்கள் அனுப்பும் எண்: (9500099100), மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான "காவல் கரங்கள்" உதவி எண்: (9444717100) மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Read Entire Article