இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் - (16.06.25 முதல் 22.06.25 வரை)

2 weeks ago 5

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள்ஓ.டி.டி தளங்கள்

பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்

அமேசான் பிரைம்

ஜின் தி பெட்

சன் நெக்ஸ்ட்

கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2

ஜியோ ஹாட்ஸ்டார்

பிரின்ஸ் அண்ட் பேமிலி

ஜீ 5

டிடெக்டிவ் ஷெர்டில்

ஜீ 5
பைட் ஆர் பிளைட்ஜியோ ஹாட்ஸ்டார்
கொல்லாஈடிவி வின்
பவுண்ட் சீசன் 2அமேசான் பிரைம்

"பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்"

பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இதில் , பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியானது.

"ஜின் தி பெட்"

டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா, இமான் அண்ணாச்சி, பால சரவணன், வடிவுக்கரிசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில், ஆக்சன், நகைச்சுவை கலந்த இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2"

அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Kerala Crime Files Season 2 ജൂൺ 20 മുതൽ ജിയോഹോട്ട്സ്റ്റാറിൽ.@LalDirector @AjuVarghesee @_AajKaArjun_ @ahammedkhabeer#HotstarSpecials #KeralaCrimeFilesSeason2 #Trailer #KeralaCrimeFilesS2 #KCF2 #KCF #JioHotstar #JioHotstarMalayalam #Investigation #Crime #Thriller #Mysterypic.twitter.com/XMxyhxsgWJ

— JioHotstar Malayalam (@JioHotstarMal) June 19, 2025

"பிரின்ஸ் அண்ட் பேமிலி"

பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

"டிடெக்டிவ் ஷெர்டில்"

ரவி சாப்ரியா இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ், சங்கி பாண்டே, டயானா பென்டி ஆகியோர் நடித்துள்ள படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. இந்தப் படம் ஒரு பணக்கார குடும்பத்தில் நடக்கும் மர்மமான கொலை மற்றும் அதைத் தீர்க்கும் ஒரு விசித்திரமான துப்பறியும் நபரைப் பற்றியது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Read Entire Article