இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் படங்கள்

2 months ago 13

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகின என்பதைக் காணலாம்.

'தி பென்குயின் சீசன் 1'

வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து டிசி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள வெப் தொடர் தி பென்குயின். இது ஒரு அமெரிக்க கிரைம் திரில்லர் தொடராகும். கொலின் பாரெல் நடிப்பில், இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட மேக்ஸ் ஒரிஜினல் தொடர், தி பேட் மேன் படத்தின் தொடர்கதை இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்தநிலையில், 'தி பென்குயின் சீசன் 1' தொடரின் 6-வது எபிசோட் நேற்று (28.10.2024) வெளியாகி உள்ளது.

'அஞ்சாமை'

எஸ்.பி. சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "அஞ்சாமை" படத்தில் விதார்த் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும் இப்படம் கூறுகிறது. இப்படம் இன்று (29.10.2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'ஜோக்கர் 2'

இந்த படத்திற்கு 'ஜோக்கர்: போலி எ டியூக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டூட் பிலிப்ஸ் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக ஜாக்குவான் பீனிக்ஸ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் லேடி காகா நடித்துள்ளார். இப்படம் உளவியல் சார்ந்த திரில்லர் திரைப்படமாகும். இப்படம் இன்று (29.10.2024) பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'அந்தகன்'

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான 'அந்தூதன்' படத்தை ரீமேக் செய்து நடிகர் பிரசாந்த நடிப்பில் வெளியான படம் 'அந்தகன்'. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார். இப்படம் நாளை (30.10.2024) பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'கார்டியன்'

இயக்குனர் சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கிய படம் 'கார்டியன்'. இப்படத்தை பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (30.10.2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'லப்பர் பந்து'

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 31-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹட்ஸ்டார், சிம்பிலி சவுத் ஆகிய ஓ.டி.டி தளங்களிலும் வெளியாக உள்ளது.

'தங்கலான்'

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். இப்படம் வருகிற 31-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'கிஸ்கிந்தா காண்டம்'

திஞ்சித் அய்யாதன் இயக்கத்தில் மர்ம திரில்லர் கதை களத்தில் உருவான படம் 'கிஷ்கிந்தா காண்டம்'. இப்படத்தில் ஆசிப் அலி , விஜயராகவன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 2024 -ம் ஆண்டு அதிக வசூல் செய்த 9-வது மலையாளப் படமாகும். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Read Entire Article