இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 21.04.25 முதல் 27.04.25 வரை

2 hours ago 3

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள்ஓ.டி.டி தளங்கள்

வீர தீர சூரன் 2

அமேசான் பிரைம்

எல் 2 எம்புரான் 

ஜியோ ஹாட்ஸ்டார்

35 சின்ன விஷயம் இல்ல

ஆஹா தமிழ்

மேட் ஸ்கொயர்  

நெட்பிளிக்ஸ்

நிறம் மாறும் உலகில் 

சன் நெக்ஸ்ட்

தருணம் 

டென்ட்கொட்டா

பாமா கலாபம் 

சிம்பிலி சவுத்

தி ரிட்டன் 

பாராமவுண்ட் பிளஸ்

ஜுவல் தீப் 

நெட்பிளிக்ஸ்

ஹவாக்  

நெட்பிளிக்ஸ்

எக்ஸ்ட்ரா டீசன்ட் 

சிம்பிலி சவுத்

'தி ரிட்டன்'

தி ரிட்டர்ன் என்பது உபெர்டோ பசோலினி இயக்கிய திரில்லர் திரைப்படமாகும். இதில் ரால்ப் பியன்னெஸ் மற்றும் ஜூலியட் பினோச் நடித்துள்ளனர். போரை பற்றிய கதையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 21-ந் தேதி பாராமவுண்ட் பிளஸ் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

'வீர தீர சூரன் 2'

சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதுரையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இப்படம் இன்று (24-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

'எல் 2 எம்புரான்'

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'எல் 2 எம்புரான்'. இந்த படத்தில் மோகன் லால் ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

'35 சின்ன விஷயம் இல்ல'

இயக்குனர் நந்த கிஷோர் இயக்கத்தில் விஷ்வதேவ் மற்றும் நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான படம் '35 சின்ன விஷயம் இல்ல'. இந்த படத்தில் கவுதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடுத்தர குடும்பங்களில் வாழ்கையை எளிமையாக கூறும் இப்படம் நாளை (25-ந் தேதி) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'நிறம் மாறும் உலகில்'

அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா நடிப்பில் வெளியான படம் 'நிறம் மாறும் உலகில்'. இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

'மேட் ஸ்கொயர்'

கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட் ஸ்கொயர்'. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கதையில் உருவாகியுள்ள இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து 25-ந் தேதி (நாளை) 'ஹவாக், ஜுவல் தீப், பாமா கலாபம், தருணம்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. அதனை தொடர்ந்து 26-ந் தேதி 'எக்ஸ்ட்ரா டீசன்ட்' என்ற படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

Read Entire Article