
3-ந் தேதி (செவ்வாய்)
* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் உலா.
* மதுரை கூடலழகர் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கேடய சப்பரத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* சிவகாசி விசுவநாதர் ரத உற்சவம்.
* காளையார்கோவில் சிவபெருமான், திருப்பத்தூர், திருத்தணிநாதர் தலங்களில் திருக்கல்யாணம்.
* பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் உலா.
* மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் வெள்ளி ரத உற்சவம்.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
* திருவாடானை, நயினார் கோவில், திருப்பத்தூர் தலங்களில் சுவாமி வெள்ளி விருட்சப சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சுமார்த்த ஏகாதசி.
* மாயவரம் கவுரிமாயூர நாதர் திருக்கல்யாணம்.
* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப் பெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* மதுரை கூடலழகர் பெருமாள் யானை வாகனத்தில் பவனி.
* காட்டுபருவூர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப சேவை.
* சமநோக்கு நாள்.
8-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணம்.
* நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி ரத உற்சவம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* வைகாசி விசாகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்.
* திருப்பத்தூர், திருத்தணிநாதர் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.