22-ந்தேதி (செவ்வாய்)
* சஷ்டி விரதம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள், மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
23-ந்தேதி (புதன்)
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
* வீரவநல்லூர் மரகதாம் பிகை, பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் திருவீதி உலா.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு,
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (வியாழன்)
* தேய்பிறை அஷ்டமி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (வெள்ளி)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (சனி)
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவபூஜை, இரவு சப்தாவர்ண பல்லக்கில் வீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன், பத்தமடை மீனாட்சியம்மன் தலங்களில் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
27-ந்தேதி (ஞாயிறு)
* வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை தலங்களில் திருவீதி உலா.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
28-ந்தேதி (திங்கள்)
* சர்வ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
* கீழ்நோக்கு நாள்.