இந்த வார விசேஷங்கள்: 11-3-2025 முதல் 17-3-2025 வரை

14 hours ago 3

11-ந் தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

* காங்கேயம் முருகப் பெருமான்-வள்ளி திருமணக்காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.

* குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* மாசி மகம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் ரத உற்சவம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

* பவுர்ணமி.

* காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாணவேடிக்கையுடன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம் அருளிய லீலை.

* காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

* ஹோலி பண்டிகை.

* காரடையான் நோன்பு.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரை வாகனத்தில் பவனி.

* நத்தம் மாரியம்மன் சந்தனக்குட காட்சி, மின்விளக்கு அலங்கார வசந்த மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.

* வேதாரண்யம் சிவபெருமான் பவனி.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார

திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.

* நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சங்கடகர சதுர்த்தி.

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம்.

* நத்தம் மாரியம்மன் மஞ்சப் பாவாடை, பால்குடம், காவடி ஆட் டம், அரண்மனை பொங்கல், மாவிளக்கு காட்சி.

* சமநோக்கு நாள்.

Read Entire Article