இந்த ஆட்சியில் இவர், அவர் என்று பாகுபாடு பார்க்காமல் 234 தொகுதிகளையும் சமமாக பார்த்து தரமான சாலைகள் போடப்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

1 week ago 3

சட்டப்பேரவையில் நேற்று மயிலம் சிவகுமார் (பாமக) கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது, “சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் ஓரத்தூர் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பால பணிய விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில், முண்டியம்பாக்கம் – ஓரத்தூர் பிரிவு சாலை கி.மீ. 154/280 மற்றும் அரசு மருத்துவ கல்லூரி எதிரில் கி.மீ. 154/730 ஆகிய இரண்டு விபத்து பகுதிகளையும் இணைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைக்காக வாகன சுரங்கப்பாதை 5.5. மீட்டர் உயரத்திலும் மற்றும் இலகுரக வாகன சுரங்கப்பாதை 4.5 மீட்டர் உயரத்திலும் அமைக்க ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சர்வீஸ் சாலைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், போக்குவரத்து மாற்றம் செய்து உயர்மட்ட மேம்பாலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் இவர், அவர் என்று பாகுபாடு பார்க்காமல் 234 தொகுதியையும் சமமாக பார்த்து, தரமான சாலைகள் போடப்பட்டு வருகிறது.

சொந்த தொகுதி அறிவிப்பை தம் கட்டி படித்த அமைச்சர்
பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்னர் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் சக்கரபாணி பேசினார். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘உணவுத்துறை அமைச்சர் தம் கட்டி, இவ்வளவு நேரம் அறிவிப்புகளைப் படித்ததற்கு காரணமே, கடைசியாக இடம்பெற்றுள்ள ஒட்டன்சத்திரத்திலே 3,400 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்படும் என்று அறிவிப்புதான்’’ என்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘‘எப்படியென்றாலும், சொந்த தொகுதியல்லவா’’ என்றார். இதனால் சிரிப்பலை எழுந்தது.

The post இந்த ஆட்சியில் இவர், அவர் என்று பாகுபாடு பார்க்காமல் 234 தொகுதிகளையும் சமமாக பார்த்து தரமான சாலைகள் போடப்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article