
ரோம்,
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி - அமெரிக்க வீரர் பிராண்டன் நகாஷிமா ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார். இதனால் லோரென்சோ முசெட்டி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.