
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 1 மணி 43 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்டில் சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.9½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.5 கோடி கிட்டியது.