
ரோம்,
பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செர்பியாவின் லாஸ்லோ டிஜெரே உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் லாஸ்லோ டிஜெரேவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்கராஸ், ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.