“இதுவரை கேள்விப்படாத போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு” - அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

4 months ago 20

சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் இதுவரை கேள்விப்படாத போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை காவல்துறை தலைமை இயக்குநரே, தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் 19.10.2024 அன்று நடைபெற்ற தென் மாநிலங்களுக்கு இடையேயான சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசியுள்ளார்.

Read Entire Article