இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில்

1 week ago 3

சீனா: இது வெறும் மிரட்டல்; தவறுக்கு மேல் தவறு செய்கிறது அமெரிக்கா என ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதிலடி தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதித்த வரியை திரும்பப் பெறவில்லை என்றால், அந்நாட்டுப் பொருள்கள் மீது ஏப்ரல் 9ம் தேதி முதல் கூடுதலாக 50 % வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும், வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் எச்சரித்துள்ளார். இத்தகைய ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இது வெறும் மிரட்டல், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்” என அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதிலளித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இது அமெரிக்காவின் மிரட்டலை மீண்டும் அம்பலப்படுத்துகிறது. அமெரிக்கா தனது விருப்பப்படி நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால், சீனாவும் இறுதிவரை போராடும். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முயல்கிறது. வர்த்தகப் போரில் வெற்றியாளர்கள் யாரும் இல்லை” என அமைச்சகம் அதில் தெரிவித்துள்ளது. முன்னதாக, “2017 ஆம் ஆண்டு அமெரிக்கா (முதல்) வர்த்தகப் போரை ஆரம்பித்ததிலிருந்து – அமெரிக்கா எவ்வாறு போராடினாலும் அல்லது அழுத்தம் கொடுத்தாலும் – நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து முன்னேறி வருகிறோம், மீள்தன்மையை வெளிப்படுத்துகிறோம் – ‘எவ்வளவு அழுத்தம் பெறுகிறோமோ, அவ்வளவு வலிமையானவர்களாக மாறுகிறோம். அமெரிக்க வரிகள் (சீனாவில்) தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ‘வானம் இடிந்து விழாது என விளக்க உரையில் தெரிவித்துள்ளது.

 

The post இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில் appeared first on Dinakaran.

Read Entire Article