இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

3 months ago 27
சேலம் அரசு மருத்துவமனையில் திருட்டு போய் போலீஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட பைக்கை வாங்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு... சேலம் அடுத்த டி.பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனம் களவு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் 2 ஆண்டுகள் கழித்து சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்து திருடு போன தங்கள் வண்டியை கண்டுபிடித்து விட்டோம் என்று கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் வந்து வண்டியை பெற்றுக் கொள்வதாக சாட்சி கூறினால் பைக்கை தந்துவிடுகிரோம் என்று கூறியுள்ளனர். அதன்படி நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு வண்டியை பெரும் ஆவலில் காவல் நிலையம் சென்ற வெங்கடேஸ்வரன் தனது பைக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீட்கப்பட்ட பைக் என்று போலீஸ் கொடுத்தது ஸ்பிலெண்டர் பைக்கின் கெட்லைட் டூம், மற்றும் பிளாஸ்டிக் பேட்டரி கவர் மட்டுமே..! பைக்குன்னா என்ஜின், வீல், ஹேண்டில் பார் கிலட்ஜ், கியர் பாக்ஸ், சீட்டு என ஒன்றையும் காணோமே என்று கேட்டுள்ளார் வெங்கடேஸ்வரன், கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் எல்லாவற்றையும் கழட்டி விற்று விட்டார்கள், மிச்சம் மீதி இவ்வளவு தான் கிடைச்சது என்று கூலாக கூறி உள்ளனர் போலீசார் பைக் திருட்டு தொடர்பாக பள்ளிபாளையம் நந்தகுமார், திருப்பூர் ராஜாவை கைது செய்த போலீசார் அவர்கள் பைக்கை கழட்டி விற்ற இடத்தில் இருந்து எந்த பொருளையும் கைப்பற்றவில்லை என்று கூறப்படுகின்றது. வெங்கடேஸ்வரன் செய்தியாளரிடம் கூறும்போது, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டதாக வண்டியின் புகைப்படத்தை காட்டினர். இதனால் தான் டூவீலர் வாங்க வந்தேன். இங்கு வந்து வாகனத்தின் இரண்டு பிளாஸ்டிக் பாகங்களை மட்டும் கொடுத்து இதுதான் உன்னுடைய வண்டி என்றார்கள் என்று வெங்கடேஸ்வரன் வேதனையுடன் தெரிவித்தார்.
Read Entire Article