'இது ஒரு கெட்ட கனவு' - டீப் பேக் வீடியோ வெளியானநிலையில் நடிகை பிரக்யா நாக்ரா பதிவு

1 month ago 6

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரக்யா நாக்ரா. அதனைத்தொடர்ந்து 'என் 4' படத்தில் நடித்த பிரபலமான இவர், மலையாளத்தில் 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவரின் டீப் பேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலானநிலையில், நடிகை பிரக்யா நாக்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'இது ஒரு கெட்ட கனவு என்று நான் நம்புகிறேன். தொழிநுட்பம் என்பது நமக்கு உதவுவதற்காக உள்ளதே தவிர, நம் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்துவதற்கு அல்ல. இந்த தருணங்களில் எனக்காக இருக்கும் அனைவருக்கும் நன்றி. வேறு எந்தப் பெண்ணும் இதுபோன்ற சோதனையைச் சந்திக்கக் கூடாது என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Still in denial, and still hoping that it's just a bad dream that I will wake up from. Technology was meant to help us and not make our lives miserable.Can just pity the evil minds who misuse it to create such AI content and the people who help spread it!Trying to stay strong…

— Pragya Nagra (@PragyaNagra) December 7, 2024
Read Entire Article