இதயம் ஆரோக்கியமாக இருக்க சித்த மருத்துவம்

6 months ago 22

இதய நோய் வராமல் தடுப்பதற்கான குடிநீர் வகைகள்:

1. மருதம் பட்டை, நொச்சி இலை, தாளிக் கீரை, சாதிக்காய், சாதிபத்திரி, நாவல்விதை இவற்றை ஓர் அளவாகக் கொண்டு முறைப்படி குடிநீராக்கி 60 மிலி அளவு காலை, மாலைகளில் உட்கொள்ளலாம்.

2. பேரீச்சை, சிங்காரக் கிழங்கு (பண்ணிமோந்தான் கிழங்கு), நிலப்பனை, தண்ணீர் விட்டான், வில்வப் பட்டை, தாமரைக் கிழங்கு, மருதம்பட்டை இவற்றை வகைக்குப் பலம் ஒன்று கொண்டு, முறைப்படி குடிநீரிட்டு காலை மட்டும் சாப்பிடவும்.

3. வில்வப்பட்டை, தேவதாரம், குரோசாணி ஓமம், இலவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, மருதம்பட்டை தலா 35 கிராம் அளவுக்கு எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, எட்டில் ஒன்றாய்க் காய்த்து வடித்து 60 மிலி வீதம் வீதம் காலை, மாலை சாப்பிடவும்.

4. ஆட்டின் தமரகம் (இருதயம்) ஒன்றை எடுத்து அதனை சிறிய துண்டுகளாக்கி, அத்துடன் இலவங்கப்பட்டை, சாதிக்காய், சாபத்திரி இவற்றின் பொடிகள் ஒரு சிட்டிகையும், உப்பு ஒரு சிட்டிகையும் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி குடிக்கலாம்.

5. வெண்தாமரை சூரணம் - காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.

6. தேனில் ஊறவைத்த கர்ச்சூர் என்னும் பேரீச்சையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நீங்கும்.

Read Entire Article