
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-0 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.