இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

2 days ago 2

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அமெரிக்காவின் மார்கஸ் ஜிரோனை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் மார்கஸ் ஜிரோனும், ஆட்டத்தின் 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கேஸ்பர் ரூட்டும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் அனுபவ வீரரான கேஸ்பர் ரூட் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மார்கஸ் ஜிரோன் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி மார்கஸ் ஜிரோன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அனுபவ வீரர் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Read Entire Article