இணையவழி மூலம் மீண்டும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு: உயர் கல்வித்துறை தகவல்

2 weeks ago 4

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் நடத்தப்படுகிறது. அதேபோல், அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் இணைய வழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின்பேரில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, www.tngasa.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு 192 ஆசிரியர்களுக்கு அவர்களது விருப்பப்படி அரசு கல்லூரிகளில் வெளிப்படையான பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. அப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆணைகளை வழங்கினார். அதன்பின்னர், நடத்தப்படாமல் இருந்த கல்லூரி பேராசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்துவதற்கு உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் 13 பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு இணையதளம் மூலமாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகள் நிறைவுற்றதும் விரைவில் மாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இணையவழி மூலம் மீண்டும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு: உயர் கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article