இணையம் சார்ந்த தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய முகாம்

2 months ago 9

சிவகங்கை, நவ.10: இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வாரந்தோறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10மணி முதல் 12மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். எனவே, இச்சிறப்பு முகாமினை இணையம் சார்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இணையம் சார்ந்த தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article