இணையத்தில் வைரலாகும் ஷாலினி பகிர்ந்த வீடியோ

3 months ago 21

சென்னை,

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற்றது.

இவர்களுக்கு தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், அஜித்-ஷாலினியின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும், மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article