இணையத்தில் வைரலாகும் அஜித்தின் செல்பி வீடியோ!

3 months ago 23

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், கடைசியாக 'துணிவு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இவரின் நடிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பட குழுவினர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் அஜித் படப்பிடிப்பு பணிகளி இல்லாத சமயங்களில் நண்பர்களுடன் பைக் மற்றும் காரில் சுற்றுலா சென்று வருவார். அதேபோல் சமீபத்தில் அஜித் கார் ரேஸிங் அணியை தொடங்கி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில் அஜித்தின் செல்பி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கால்பந்து போட்டி ஒன்றை காண சென்றபோது அஜித் செல்பி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Thala #Ajithkumar's Latest Selfie video..❣️ pic.twitter.com/UwVhMoXdUw

— Laxmi Kanth (@iammoviebuff007) October 15, 2024
Read Entire Article