
சென்னை,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் வரவேற்பைபெற்றநிலையில், தற்போது , டீசர் கசிந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.